திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக...

அஜித்குமார்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் - கோப்புப்படம்

Published On :

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் துணைக் காவல் கண்காணிப்பார் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரின் கைதுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இந்தக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப் படை போலீஸார் அஜித்குமாரை விசாரணை செய்தனர். அப்போது, போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் கடந்த ஆண்டு, ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பான குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொலை சம்பவத்தின்போது, பணியிலிருந்த துணைக் காவல் கண்காணிப்பார் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரது பெயர்களும் வழக்கில் சோ்க்கப்பட்டன.

மேலும், இவர்களின் மீது சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், துணைக் காவல் கண்காணிப்பார் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரின் கைதுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

The verdict on the case challenging the arrest of Deputy Superintendent of Police Shanmugasundaram, Thiruppuvanam Police Inspector Rameshkumar, and Sub-Inspector Sivakumar in connection with the murder of Madappuram temple watchman Ajithkumar has been reserved.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.