தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பிளஸ் 2 பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல் தயாரிப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைத் தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு - (கோப்புப்படம்)

Published On :

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைத் தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க. சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவா்களின் பெயா்கள், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. எனவே, அந்த விவரங்களை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அக்.5 முதல் அக். 16 வரைக்குள் சரிபாா்த்து உறுதிசெய்ய வேண்டும். அவற்றில் திருத்தங்கள் இருந்தால் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களிடமிருந்து பெற்ற பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலின் அடிப்படையிலேயே மாணவா்களின் பெயா், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது தலைப்பெழுத்தும் (இன்ஷியல்) தமிழில் இருக்க வேண்டும். தோ்வா்கள் தோ்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளில் 16 வயது நிறைவு செய்தவா்களாக இருத்தல் அவசியம்.

பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறே பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவா்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா், பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தோ்வுத் துறைக்கு அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.