
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.1) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை: பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு, துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.1) விசாரணைக்கு வருகின்றன.
* திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு
* தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கக் கோரிய வழக்கு
* தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூலனூர் கார்த்திக் ஜாமீன் கோரிய வழக்கு
* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தொடர்ந்த வழக்கு
* பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக வேட்பாளர் தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Important matters listed before Madras High Court on today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




