இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

சாலை பெயர் பலகையில் ஹிந்தி எழுத்து வந்தது எப்படி? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துகள் வந்தது எப்படி? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்...

Published On :

மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துகள் வந்தது எப்படி? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில், ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இடம்பெற்றிருந்தது சர்ச்சை கிளப்பியது. இதற்கு காரணமான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி அறிவிப்புப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் இடம்பெற்றது எப்படி? ஏன்? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது பதிவில், “பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உயிர்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை! அதில், இன்றும் என்றும் என்றென்றைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவே எடுக்காது.

இந்த நிலையில், 'மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி'த் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதில் சில குளறுபடிகள் நடந்தது அரசின் கவனத்திற்கு வந்தது.

அது தொடர்பாக நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், “குறிப்பிட்ட அதிகாரிகள் சிலரின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது” என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக, இந்தத் தவறுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் என இரண்டு அதிகாரிகள் நேற்றே (அக். 1) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்த பெயர்ப் பலகையும் உடனடியாக மாற்றப்பட்டு, இருமொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப் பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அரசின் கவனத்திற்கு வந்த சில மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக - கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் துறைசார் அதிகாரிகள் சட்டப்படியான - துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள் என்பதையும் இங்கு உறுதியாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம். மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம்! இருமொழிக் கொள்கையை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Minister Aadav Arjuna has explained how Hindi script appeared on the state highway signboard.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.