
பாசனத்துக்கு தண்ணீர் இல்லை! கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!
வேதாரண்யம் அருகே பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் கிராம சபை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்துள்ளது பற்றி...

விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை... - DIN
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சம்பா பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் கிராம சபை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்துள்ளனர்.
வடமழை மணக்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி இன்று கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியில் சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வாயில்களுக்கு ஒரு மாதத்தை கடந்தும் பாசனம் செய்ய தண்ணீர் கிடைக்காததால் முளைப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

DIN
இந்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் வழங்காததை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

DIN
தகவல் அறிந்த வேதாரண்யம் வட்டாட்சியர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு உள்பட பொதுப்பணித் துறை மற்றும் வேளாண்துறை, காவல்துறை அதிகாரிகள் நிகழ்வு இடத்துக்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

DIN
பகல் 3 மணி வரை விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியில் சென்றனர். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Vedaranyam: No water for irrigation; Farmers boycott Gram Sabha meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







