ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

விஜய் பிரசாரம் செய்ததைவிட ரத்து செய்ததே அதிகம்! இன்றோ தெருத் தெருவாக... - பெ. சண்முகம் விமர்சனம்

பிரசாரம் செய்ததைவிட விஜய் ரத்து செய்ததே அதிகம்! இன்றோ தெருத் தெருவாக பிரசாரம் - பெ. சண்முகம் விமர்சனம்

CPIM  TN CM Vijay

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - முதல்வர் விஜய். - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவை தேர்தலின்போது பிரசாரம் செய்ததைவிட முதல்வர் விஜய், ரத்து செய்த பிரசாரமே அதிகம். இன்று மதுராந்தகத்தில் 39 இடங்கள் உள்பட தெருத்தெருவாக செல்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் சண்முகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் தெருத்தெருவாக செல்கிறார் என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் ராஜிநாமா செய்ததால் தவெக வேட்பாளர்களை விரட்டி அடிப்பது அதிகமாகவுள்ளது. நெறிமுறையற்ற செயலால் தவெகவால் திணிக்கப்பட்ட தேர்தலாகும் எனறார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை என்றும், அதனால் தான் முதலமைச்சர் விஜய் தெருத் தெருவாக பிரசாரம் செய்கிறார்.

தூய சக்தி நாங்கள் என்று கூறி வரும் விஜய் அதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் வழங்குகிறார். இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என விமர்சித்தார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் சண்முகம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறைகேட்டில் ஈடுபட்டுதான் ஆளும் கட்சிதான் வேட்பாளர் களத்தில் இருக்கிறார். அவரால் மக்களுக்கு பயனில்லை. மக்கள் மீதும் அவருக்கு அக்கறை இல்லை. அதிக ஆண்டுகள் முதல்வராக இருக்கும் ரங்கசாமி அரசியல் நெறிமுறையற்ற நிலையில்தான் தொடர்ந்த இப்பதவியில் இருக்கிறார். புதுச்சேரி முன்னேற்றத்துக்கு ஏதும் அவர் செய்யவில்லை.

மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றக்கூட அவர் செயல்புரியவில்லை. இடதுசாரிகளதான் மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்புவார்கள.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. எந்த தேர்தல் அதிகாரிகளையும் தொகுதியில் பார்க்கவில்லை. இடைத்தேர்தலில் பணப்புழக்கம், விதிமீறல் இருக்கும் என அறிந்தும் செயல்படவில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது. இதை பயன்படுத்தி தவெக, திமுக, அதிமுக அணி பணம் விநியோகத்தை செய்வதை மக்களே சொல்கிறார்கள். பணம் தராத ஒரே கட்சி கம்யூனிஸ்டுகள் தான். இதர மூன்று அணிகளும் தயக்கம் அச்சம் இன்றி பணம் விநியோகத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இல்லை.

தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்தது. இந்நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசு விரும்பும் ஆட்சியை ஏற்படுத்தும் மோசடி ஆணையராக ஞானேஷ்குமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது படிவம் மாற்றி பெயர் போதும் என்கிறார்கள். ஒரேயடியாக தாத்தா விவரம் கேட்பதும், தற்போது தந்தை பெயர் கூட தேவையில்லை என்பதும் தவறானது. தகுதியானோரை மட்டும் சேர்க்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் பிரசாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரச்சாரமே அதிகம். இன்று மதுராந்தகத்தில் 39 இடங்கள் உள்பட தெருதெருவாக செல்கிறார். தவெக ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் தெருதெருவாக செல்கிறார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.