இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி போராட்டம்! முதல்வர் பங்கேற்க வாய்ப்பு

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் குறித்து...

CM Vijay likely to participate in the protest by INDIA bloc parties against the CEC Gyanesh Kumar

இந்தியா கூட்டணிப் போராட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பு - கோப்புப் படம்

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் நடத்துவது தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும், இந்தியா கூட்டணியில் இடம்பெறாத தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரியவில்சனும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனையடுத்து, ஞானேஷ் குமாருக்கு எதிராக வருகிற அக். 13, 14, 15 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், சென்னையில் அக். 15-ல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா கூட்டணியின் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா 2 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

Summary

CM Vijay likely to participate in the protest by INDIA bloc parties against the CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER