தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

சென்னையில் 2,000 பேருக்கு டெங்கு! 109 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் இதுவரை சுமார் 2,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்....

Dengue affects 2,000 people in Chennai; Special medical camps today

சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை... - Greater Chennai Corporation

Published On :

சென்னையில் நேற்று ஒரேநாளில் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு சார்பில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் நேற்று மட்டும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 109 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நடப்பாண்டில், கடந்த வாரம் வரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழகம் முழுவதுமான டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு வெளியிடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Dengue affects 2,000 people in Chennai; Special medical camps today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.