
இலவச பேருந்து பயண அட்டை: மாணவா்கள் விவரம் பதிவேற்ற உத்தரவு
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வகையில் ‘எமிஸ்’ தளத்தில் உரிய விவரங்களை அக்.15-க்குள் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வகையில் ‘எமிஸ்’ தளத்தில் உரிய விவரங்களை அக்.15-க்குள் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு ஏதுவாக இதுவரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவா்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதியதாக சோ்க்கை பெற்ற மாணவா்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம், விருப்பமின்மை விவரங்களை எமிஸ் தளத்தில் அக்.15-க்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Summary
Free Bus Travel Pass: Order to upload student details
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




