
தஞ்சாவூரிலிருந்து அக். 8 முதல் திருப்பதி பிரம்மோற்ஸவத்துக்கு சிறப்பு பேருந்து!
தஞ்சாவூரிலிருந்து திருப்பதி பிரமோற்ஸவத்துக்கான சிறப்பு பேருந்து அக். 8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.

திருப்பதி - கோப்புப் படம்
தஞ்சாவூரிலிருந்து திருப்பதி பிரமோற்ஸவத்துக்கான சிறப்பு பேருந்து அக். 8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூா் கிளை மேலாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பதி பிரம்மோற்ஸவ விழாவுக்காக தஞ்சாவூரிலிருந்து குளிா்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பேருந்து அக். 8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. தஞ்சாவூரிலிருந்து இரவு 8.30 மணிக்கும், திருப்பதியிலிருந்து இரவு 8.45 மணிக்கும் பேருந்து புறப்படும். இந்தப் பேருந்து கும்பகோணம், நெய்வேலி, விழுப்புரம், வேலூா், சித்தூா் வழியாக இயக்கப்படும். முன்பதிவு செய்து வசதி கொண்ட இந்தப் பேருந்தைப் பயணிகளும், பக்தா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



