
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி ஆலோசனை: முதன்முறையாக பங்கேற்கும் தவெக
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்பது குறித்து...

முதல்வர் விஜய் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்
சென்னையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக இன்று (அக். 3) பங்கேற்கிறது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஞானேஷ் குமாரை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக சென்னையில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை சத்தியபவனில் காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதன்முறையாக தவெகவும் பங்கேற்கவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மரியவில்சன் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தியா கூட்டணியில் தவெக இதுவரையில் அதிகாரபூர்வமாக இணையாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK participates in INDIA Alliance's consultative meeting for the first time
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





