இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

விலைவாசியைக் கட்டுப்படுத்த தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கனிமொழி

தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருவதாக திமுக எம்பி கனிமொழி பதிவு...

DMK MP Kanimozhi

திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது தி.மு.க.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5% குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது.

நாடு முழுவதும் சில பொருள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பைத் தன்னுடைய சாதனையாக தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Decline in GST collections; what measures did the TVK government take to control prices: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.