2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைக்க புதிய கொள்கை விரைவில் வெளியீடு

தமிழகத்தில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான புதிய கொள்கையை மின்சாரத் துறை விரைவில் வெளியிட உள்ளது.

Published On :

தமிழகத்தில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான புதிய கொள்கையை மின்சாரத் துறை விரைவில் வெளியிட உள்ளது.

சூரிய எரிசக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துவரும் நிலையில், பகல் நேரத்தில் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து, மின் தேவை அதிகமாக இருக்கும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதல்கட்டமாக 500 மெகாவாட் திறனில், 1,000 மெகாவாட் -மணி அளவிலான தனித்த பேட்டரி சேமிப்பு அமைப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களில் 6 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 375 மெகாவாட் திறனில், 1,500 மெகாவாட்- மணி சேமிப்புத் திறன் கொண்ட மற்றொரு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை அமைப்பதற்கு தேவையான நடைமுறைகள், முதலீட்டை ஈா்ப்பதற்கான சலுகைகள், மின்வாரியத்துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தை பேட்டரி எரிசக்தி சேமிப்புத் துறையில் முக்கிய மையமாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிப்பது, மின் கட்டமைப்பில் ஏற்படும் சுமையைக் குறைப்பது, சூரிய மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கும் பேட்டரி எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பு உதவும் என எரிசக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், மின் தேவைக்கேற்ப மின்சாரத்தை சேமித்து வழங்குவதன் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.