தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

சென்னைக்கு மழை எப்போது? வெளியான புதிய தகவல்!

சென்னையில் எப்போது மழை பெய்யும் என்பது குறித்து...

rain

சென்னைக்கு மழை - கோப்புப்படம்

Published On :

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 நாள்களில் நண்பகலில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 5-6 நாள்களில் விலகுவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் நிலையற்ற தன்மையால் அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மாலை அல்லது இரவு மழை தீவிரமடையும்.

உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்கள் மழை பரவலாகும். பகலில் வெய்யில் அடித்தாலும், மாலை/இரவு/நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக அடுத்த 3 நாள்களில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை மாலை/இரவு நேரத்தில் எதிர்ப்பார்க்காலாம்.

வரும் அக். 8,9 ஆகிய தேதிகளில் கடலோரத்தில் கனமழை பெய்ய வாய்புள்ளது.

காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2-3 நாள்கள் நண்பகலில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகும். அக். 8,9 ஆகிய தேதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4-5 நாள்களில் வெப்பச்சலன இடிமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் மழை எப்போது?

சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 நாள்களில் நண்பகலில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. தற்போது பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை.

இந்த மழைப்பொழிவு இடி மழைதான் என்பதால் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்யாது, ஆனால் பெய்யும் இடத்தில் சற்று பரவலாக கனமழையாக பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Private weather analyst Hemachandran has stated that there is a possibility of thunderstorms in a few places around noon in Chennai and its suburbs over the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.