நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ஜெர்மனில் சர்வதேச புத்தகக் காட்சி: தமிழக அரசின் அரங்கு திறப்பு

ஜெர்மன் நாட்டில் தொடங்கியுள்ள சர்வதேச புத்தகக் காட்சியில் தமிழக அரசின் சார்பில் பிரத்யேக அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சி - கோப்புப்படம்.

Published On :

ஜெர்மன் நாட்டில் தொடங்கியுள்ள சர்வதேச புத்தகக் காட்சியில் தமிழக அரசின் சார்பில் பிரத்யேக அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற பிராங்பர்ட் சர்வதேச புத்தக காட்சி ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, அக்.11 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், பொது நூலக இயக்ககமும் இணைந்து சென்னை சர்வதேச புத்தகக் காட்சியின் பிரத்யேக அரங்கை அமைத்துள்ளன.

இந்த அரங்கை ஜெர்மனிக்கான இந்திய துணை தூதர் (பொறுப்பு) தீபக் பன்சால் திறந்துவைத்தார். இந்த விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா கலந்துகொண்டார்.

பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், பெரியார் ஈவெரா, அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் படைப்புகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகளாவிய மொழிபெயர்ப்புக்காக சர்வதேச பதிப்பாளர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், தமிழ் நூல்களை ஐரோப்பிய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் பதிப்பாளர்களுக்கு வழங்கவும், தமிழக அரசு வழங்கும் மொழிபெயர்ப்பு மானியங்கள் மற்றும் நிதியுதவி குறித்து சர்வதேச பதிப்பாளர்களிடம் எடுத்துக்கூறும் வகையிலும் தமிழக அரசு சார்பில் இந்த பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தடன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்குமாறு சர்வதேச பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலும் இந்த அரங்கம் திறக்ககப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.