தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

அக்.11-ல் திறப்புவிழா! வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் தயாரா?

அக்.11-ல் திறப்புவிழா காணவிருக்கும் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் தயாராக உள்ளதா என்பது பற்றி..

Chennai metro train

சென்னை மெட்ரோ ரயில் - ENS

Published On :8 அக்டோபர் 2026, 12:38 pm IST

வடபழனி - பூந்தமல்லி இடையே அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக். 11ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கும் நிலையில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் இன்னமும் தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒருபக்க நுழைவு வாயிலில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் கவனித்துள்ளனர்.

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில்தான், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முதல் மெட்ரோ வழித்தடத்திலிருந்து மாறுவதற்கான ரயில் நிலையமாக உள்ளது. 14.64 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் இந்த வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார்.

இரண்டாம் நிலை மெட்ரோ ரயில் நிலையங்களில் இரண்டு வெளியேறும் மற்றும் உள்நுழையும் வாயில்கள் உள்ளன. வடபழனி ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை ஆற்காடு காவல்நிலையம் அருகே ஒரு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைப்பதற்கான மற்றொரு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதாவது, முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சாலையின் குறுக்கே ஒரு நடைபாதை (skywalk) அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதலாம் கட்ட நிலையத்திற்கு அருகிலுள்ள நுழைவுப் பகுதியும், 100 அடி சாலையை நோக்கிய வெளியேறும் பகுதியும் இன்னும் கட்டுமான நிலையிலேயே உள்ளன.

ஸ்கைவாக் அருகே உள்ள நுழைவு வாயில் இன்னமும் பணி முடியாததால், பயணிகள் வெளியேறுவதற்கு, தானியங்கி கட்டண வசூல் (AFC) வாயில்கள் அமைந்துள்ள 'முதலாம் கட்ட' (Phase I) நிலையத்தை அடைய ஸ்கைவாக்கைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க பிப்ரவரி மாதத்திலும், பிறகு ரயிலின் வேகம் உள்ளிட்ட அனுமதிகள் மே மாதத்திலும் கிடைக்கப்பெற்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று நிலைகளைக் கொண்ட ஒரே உயரமான (elevated) ரயில் நிலையமாக வடபழனி விளங்குகிறது. இதன் முதல் நிலை வணிகப் பயன்பாட்டிற்காகவும், இரண்டாவது நிலை பயணச்சீட்டு வசதிகளுக்காகவும், மூன்றாவது நிலை நடைமேடைக்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், போரூர் முதல் பூந்தமல்லி வரையில், அண்ணாநகர், ஷெனாய் நகர், திருவொற்றியூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.