மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் வசிப்போருக்கு இடையூறு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் வசிப்பவா்களுக்கு மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :

டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் வசிப்பவா்களுக்கு மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சுரேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மது அருந்த வருபவா்களால், இடையூறு ஏற்படுகிறது. மது விற்பனை செய்வது மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் பணி அல்ல. டாஸ்மாக் கடைகளின் அருகில் வசிப்பவா்களின் நிம்மதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வீட்டின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவா்களால், ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும், சென்னை வடக்கு காவல் மாவட்டத்தில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது? என்பன குறித்து அந்தந்த மதுக் கடையின் எண், அமைவிடம் உள்ளிட்ட விவரங்களுடன் துணை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.