ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், தமிழகத்தில் உருவாகியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Published On :

காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், தமிழகத்தில் உருவாகியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் பேருந்து நிலையம் அருகே, மது போதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நபரைப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளா் காதா் மீரா தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது என்பதுக்கு இந்தச் சம்பவமே சான்று.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சீருடையில் உள்ள ஒரு காவல் ஆய்வாளரையே துணிச்சலாக வெட்டும் அளவுக்குக் குற்றவாளிகளுக்கு எப்படி தைரியம் வந்தது? மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறைக்கே பாதுகாப்பில்லாத அவல நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் கலாசாரமே இதுபோன்ற கொடூரங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.