டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முதல்வர் விஜய் தனது தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

முதல்வர் விஜய் தனது தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

Vijay | Nainar Nagenthran

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 5:14 pm IST

புதுக்கோட்டை சம்பவத்தைக் குறிப்பிட்டு, முதல்வர் விஜய் தனது தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை (செப். 2) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

முதல்வர் ஜோசப் விஜய் தனது ‘தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா?

புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே, அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி, ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்ததால் அதில் பயணம் செய்த எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

சமூக நீதி பேசும் இந்த மண்ணில், கல்வி பயில ஆர்வத்துடன் வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே நேர்ந்த அவமானமாகும். தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணன் என்றும், மகன் என்றும் மேடைதோறும் பாச வசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் ஆட்சியில், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அவமரியாதைகளும் மலிந்துவிட்டன.

பள்ளி நேரங்களில் போதுமான பேருந்துகளை இயக்காமல், கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி மாணவிகளைத் தூக்கி எறிவதுதான் மாற்றத்திற்கான ஆட்சியா? முதல்வர் விஜய்யின் மேடை வசனங்களுக்கும் நிஜமான நிர்வாகத்திற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

இச்சம்பவத்திற்குக் காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காயமடைந்த மாணவிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, பள்ளி நேரங்களில் தடையின்றி கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில், தமிழக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காகப் பாரதிய ஜனதா கட்சி வீதியில் இறங்கிப் போராடும் என எச்சரிக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Referring to the Pudukkottai incident, BJP State President Nainar Nagendran questioned on Wednesday (Sept. 2) whether this was the protection Chief Minister Vijay provides to his sisters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.