தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அக்.12 மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

weather update

மழை - பிரதிப் படம்

Published On :

நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.12) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.12), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 50 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.