உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு...

Rain chances in 8 districts tomorrow!

மழை - பிரதிப் படம்

Published On :

கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தெற்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து உள் தமிழகம், உள் கா்நாடகம் வழியாக வடக்கு மத்திய மகாராஷ்டிரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் தனிச்சியத்தில் 80 மி.மீ. மழை பதிவானது.

Summary

Chance of moderate rain in 12 districts today.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.