இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்வி
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்ற மாணிக்கம் தாகூரின் கேள்விக்கு திமுக பதில் அளித்துள்ளது குறித்து...

மு.க. ஸ்டாலின் / ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கையொப்பம் - எக்ஸ்
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்ற மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் கேள்விக்கு திமுக பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திமுக பதிவிட்டுள்ளதாவது:
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? எஸ்.ஐ.ஆர்.-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர்.
அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பிரசாரத்துக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை எஸ்.ஐ.ஆர். மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு தோன்றாது எனப் பதிவிடப்பட்டுள்ளது.
à®à¯à®à¯à®à®£à®¿à®¯à®¿à®²à¯ à®à®²à¯à®²à®¾à®¤ à®à®´à®à®¤à¯à®¤à¯ நà¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®µà¯à®®à¯ à®à®¾à®à¯à®à®¿à®°à®¸à¯ தலà¯à®µà®°à¯ வாய௠à®à®à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯! à®à®²à¯à®²à¯à®¯à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®à®à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯!
— DMK (@arivalayam) October 12, 2026
à®à®à¯à®à®®à®©à¯à®±à®ªà¯ பà¯à®¤à¯à®¤à¯à®¤à¯à®°à¯à®¤à®²à¯à®à¯à®à¯ à®®à¯à®©à¯à®ªà¯, தனத௠திமிரà¯à®ªà¯à®ªà¯à®à¯à®à¯à®à®³à®¾à®²à¯, தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®²à¯ வலà¯à®µà®¾à® à®à®°à¯à®¨à¯à®¤ பா.à®.à®. à®à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯à®à¯ à®à¯à®à¯à®à®£à®¿à®¯à¯à®à¯ à®à¯à®°à¯à®à¯à®²à¯à®¤à¯à®¤ த.வà¯.à®. à®à®à®¿à®®à¯ மாணிà®à¯à®à®®à¯ தாà®à¯à®°à¯â¦ pic.twitter.com/apNVYS2Gu5
Summary
Were DMK MPs not present at the Delhi protest? What standing does Manickam Tagore have? DMK asks!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


