‘போஸ்ட்மேன் என முழங்கிய திமுக ஆளுநர் மாளிகையில் சரணாகதி’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்!
ஆளுநர் மாளிகை வாசலில் திமுக சரணாகதி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம்..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் | மாணிக்கம் தாகூர்.
ஆளுநர் மாளிகை வாசலில் திமுக சரணாகதி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சித்துள்ளார்.
பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மனு அளித்தார்.
இந்த நிலையில், இன்று காலை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனுவை அளித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர்.
இந்த நிலையில், ஆளுநரைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்! என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!
அன்று அதிகாரம் கையில் இருந்தபோது "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக! மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி!” எனப் பதிவிட்டுள்ளார்.
"ய௠à®à®°à¯ à®à®¸à¯à®à¯ ஠பà¯à®¸à¯à®à¯à®®à¯à®©à¯!" à®à®©à¯à®±à¯ à®®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®®à¯à®´à®à¯à®à®¿à®¯à®µà®°à¯à®à®³à¯, à®à®©à¯à®±à¯ à®à®¤à¯ 'தபாலà¯à®à®¾à®°à®°à®¿à®à®®à¯' தபால௠à®à¯à®à¯à®à¯à® வரிà®à¯à®¯à®¿à®²à¯ நிறà¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯!
— Manickam Tagore .Bð®ð³à®®à®¾à®£à®¿à®à¯à®à®®à¯ தாà®à¯à®°à¯.ப (@manickamtagore) November 26, 2026
à®à®©à¯à®±à¯ à®à®¤à®¿à®à®¾à®°à®®à¯ à®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯ "à®à®à¯à®à¯à®à¯à®à¯à®¤à¯ தாà®à®¿à®¯à¯à®®à¯ நாà®à¯à®à¯à®à¯à®à¯ à®à®³à¯à®¨à®°à¯à®®à¯ à®à®¤à®±à¯à®à¯?" à®à®©à¯à®±à¯ à®à¯à®³à¯à®à¯ à®®à¯à®´à®à¯à®à®®à¯; à®à®©à¯à®±à¯ பதவி பà¯à®©à®¤à¯à®®à¯ à®à®³à¯à®¨à®°à¯ மாளிà®à¯ வாà®à®²à®¿à®²à¯â¦ pic.twitter.com/BR6QkbpE9H
Summary
Tamil Nadu Congress Committee President and MP Manickam Tagore has criticized the DMK, stating that the party has surrendered at the gates of the Raj Bhavan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

