ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா? உயர் நீதிமன்றம் கேள்வி
ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

உயர் நீதிமன்றம் கேள்வி
ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநர் அதிகாரம் பற்றி பேசுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் , தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அன்பில் மகேஸ் தரப்பில், ஆளுநர் ஒப்புதல் இல்லாமல், அரசுத்துறை செயலாளரின் அனுமதி பெற்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ஆளுநர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக, ஆளுநரின் அதிகாரம் பற்றி எப்போது பேச ஆரம்பித்தது? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், முன்ஜாமீன் கோரி எப்போது மனுத்தாக்கல் செய்ய உள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அன்பில் மகேஸ் தரப்பில், முன் ஜாமீன் கோரி நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாக பதிலளிக்கப்பட்டது. மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, அன்பில் மகேஸின் மனு மீதான விசாரணையை அக். 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

