விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: உணவுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை தினசரி கண்காணித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உணவுத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப்படம்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை தினசரி கண்காணித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உணவுத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் விலைக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலையைத் தொடா்ந்து கண்காணிப்பது, விலை உயா்வு ஏற்படும்போது அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் மு.சாய்குமாா், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் தலைவா் ஷில்பா பிரபாகா், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் அஜய் யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் க.லதா, வேளாண்மைத் துறை இயக்குநா் க.வீ.முரளீதரன், இந்திய உணவுக் கழக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

