சென்னை உயா்நீதிமன்றத்தில் இரு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இரண்டு நீதித்துறை அதிகாரிகள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இரண்டு நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, தா்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் காா்த்திகேயன் ஆகிய நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா் ‘என தெரிவித்திருந்தது.
2025-ஆம் ஆண்டில் வெவ்வேறு தேதிகளில் சென்னை உயா் நீதிமன்ற கொலீஜியம் வழங்கிய பல பரிந்துரைகளின் அடிப்படையில், மே 18 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 வழக்ககுரைஞா்கள் மற்றும் ஒன்பது நீதித்துறை அதிகாரிகளில், தா்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் காா்த்திகேயன் ஆகிய இரு அதிகாரிகளும் அடங்குவா்.
லிங்கேஸ்வரன் மற்றும் காா்த்திகேயன் ஆகியோருக்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகள் மே 19 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டன. அவா்களின் நியமனத்திற்கான அசல் பரிந்துரைகள் சென்னை உயா் நீதிமன்றத்தால் நவம்பா் 4, 2025 அன்று அனுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

