ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

சொந்தப் பாதுகாப்பை மறந்துவிடுகிறோம்: இன்ஸ்டா பிரபலம் வீரமணி குறித்து கேரள காவல்துறை!

இன்ஸ்டா பிரபலம் வீரமணி குறித்து கேரள காவல்துறையின் பதிவு...

Instagram celebrity Veeramani

இன்ஸ்டா பிரபலம் வீரமணி - படம் - எக்ஸ்

Updated On :

இன்ஸ்டாகிராமில் வைரலாகிவரும் வீரமணி குறித்து கேரள காவல்துறை பதிவு ஒன்றை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தன்னைப் பின்தொடர்பவர்கள் தனக்கு இனிப்புகளை (ஸ்வீட் பாக்ஸ்) அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தனது வீட்டின் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டிருந்தார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்கள், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன்கள் போன்ற பல பொருள்களை கேஷ் ஆன் டெலிவரி மூலம் அவரது முகவரிக்கு ஆர்டர் செய்தனர்.

மேலும் பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி, ஸொமேட்டோ தளங்களின் மூலம் உணவுப்பொருள்கள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றையும் வீரமணிக்காக மக்கள் ஆர்டர் செய்தனர். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி தயவுசெய்து, தனக்காக எந்தப் பொருளையும் ஆர்டர் செய்ய வேண்டாம் எனவும் அதனை வாங்கத் தன்னிடம் பணம் இல்லை எனவும் விடியோ வெளியிட்டார்.

இருப்பினும் ஆர்டர்கள் வீடு தேடி வருவது நின்றபாடில்லை. எனவே, தான் வசிக்கும் வீட்டைப் பூட்டிவிட்டு வீரமணி வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவர் உண்மையில் தற்போது எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.

இது தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வீரமணியின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கேரள காவல்துறை ஒரு விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், “சமூக ஊடகங்களில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் டிரெண்டுகளில் நாம் மூழ்கிவிடும்போது, ​​நமது சொந்தப் பாதுகாப்பைப் பற்றி மறந்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

வீரமணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவம் நகைச்சுவையாக இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அந்தப் பொருள்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள்தான்; அவர்களின் உழைப்பு, நேரம் வீணடிக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Kerala Police has posted about Veeramani who is going viral on Instagramon its official X account.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.