உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

உங்களால் ரோடு ரோடாக அலைகிறேன்: இன்ஸ்டா பிரபலம் வீரமணி புலம்பல்!

இன்ஸ்டா பிரபலம் வீரமணி விடியோ பற்றி...

I am roaming the streets because of you: Insta celebrity Veeramani's lament!

இன்ஸ்டா பிரபலம் வீரமணி புலம்பல்

Published On :

ஓசியில் ஸ்வீட் பாக்ஸ் கேட்டதால் வீட்டை விட்டு வெளியேறி தற்போது ரோடு ரோடாக அலைவதாக இன்ஸ்டா பிரபலம் வீரமணி புலம்பி விடியோ வெளியிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணி, சமீபத்தில் கேரளம் சுற்றுலா செல்வதற்காகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூஆர் கோடைப் பகிர்ந்து, உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் என்று ஃபாலோயர்களிடம் கேட்டிருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்று ஃபாலோயர்கள் அனுப்பிய 6,000 ரூபாய்யைக் கொண்டு கேரளம் சென்று வந்துவிட்டதாகவும் அவர் விடியோ வெளியிட்டார். அதன் பிறகு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஃபாலோயர்கள் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தனது வீட்டின் முகவரியையும், கைப்பேசி எண்ணையும் வெளிப்படையாக வெளியிட்டிருக்கிறார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்கள், அவரை வைத்து இணையத்தில் கடும் பிராங்க் செய்யத் தொடங்கிவிட்டனர். அவரது முகவரிக்குக் கேஷ் ஆன் டெலிவரி முறையில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன்கள் என சுமார் ரூ. 1.69 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஆர்டர் செய்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, பிளிங்கிட், ஸெப்டோ போன்ற செயலிகள் மூலம் பால் பாக்கெட்டுகள், ஸ்விக்கி, ஜொமேட்டோ மூலம் மட்டன் பிரியாணி மற்றும் மளிகைப் பொருட்கள் என நூற்றுக்கணக்கான டெலிவரிகள் அவரது வீட்டுக் கதவைத் தொடர்ச்சியாகத் தட்டின.

மேலும், அவரது கைப்பேசி எண்ணைப் பயன்படுத்திச் சில ஆன்லைன் தளங்களில் மேட்ரிமோனி கணக்குகள் மற்றும் இலவச சிறுநீரக தானம் போன்ற விளம்பரப் பதிவுகள் செய்யப்பட்டதால், அவருக்குத் தொடர்ந்து மர்ம அழைப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. சிலர் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் ராணுவப் பீரங்கிகளை அவரது வீட்டிற்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்தது போன்ற மீம்ஸ்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, காலில் விழுந்து கேட்கிறேன் நண்பர்களே, தயவுசெய்து ஆர்டர் போடுவதை நிறுத்துங்கள், தெரியாமல் ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டுவிட்டேன், என்னிடம் பணம் இல்லை என்று கண்ணீருடன் விடியோ வெளியிட்டுள்ளார். டெலிவரி ஊழியர்களின் உழைப்பு இதனால் வீணாவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இந்தத் தொல்லைகள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, வீரமணி தனது வீட்டைப் பூட்டிவிட்டுத் தற்காலிகமாக வேறு இடத்திற்குத் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், "உங்களால் ரோடு ரோடாக அலைகிறேன். வீட்டிற்கே போகவிடாமல் செய்துவிட்டீர்கள். ஊரில் எங்க அம்மா, அப்பா எல்லாம் சண்டைக்கு வருகிறார்கள்" என்று புலம்பி அவர் கடைசியாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இருப்பினும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும், அவரது இந்த விடியோவையும் நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களையும் முகவரியையும் எளிய முறையில் பகிர்வது எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தகுந்த சாட்சியாக அமைந்துள்ளது.

Summary

Insta Influencer Veeramani Escapes to a Graveyard After Getting Rs 1.69 Lakh Worth of Unwanted Cash-on-Delivery Orders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.