சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

அப்பா இல்லாத 2 நாள்கள்... இறுதிச் சடங்கிற்கு பின் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி

இனி வரும் நாள்களை எப்படிக் கடப்பேன் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது குறித்து...

Srikanth Deva's interview after the funeral

ஸ்ரீகாந்த் தேவா / இறுதிச் சடங்கு - எக்ஸ்

Updated On :

அப்பா இல்லாத 2 நாள்களைக் கழிப்பதே சிரமமாக இருந்தது; இனி வரும் நாள்களை எப்படிக் கடப்பேன் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் இன்று (அக். 18) நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கு செய்து, தேவாவுக்கு பிரியாவிடை அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, நல்லடக்கம் செய்ய உதவியாக இருந்த கிராம மக்கள், காவல் துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது:

''உணவு எடுத்துக்கொள்வதில் எப்போதுமே நேரம் தவறாமல் இருப்பார். சரியான நேரத்தில் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். ஆனாலும், அப்பா தவறியது சங்கடமாக இருக்கிறது.

அப்பா என்ற உறவு பற்றி பலர் கூறிக் கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் அதை உணர்ந்தேன். அவர் இல்லாத இந்த 2 நாள்களை கடப்பதே சிரமமாக உள்ளது. இனி வரும் நாள்களை எப்படி கடக்கப்போகிறேன் என்று தெரியவில்லை.

தமிழக முதல்வர் விஜய் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாகக் கூறினார். அதன்படியே செய்தார்.

இதுமட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களான மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் என பலர் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்பாவுடன் பழகியவர்கள் மட்டுமின்றி அவரைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் கூட வந்து மரியாதை செய்தனர்.

தமிழக மக்கள் என் அப்பாவை கொண்டாடினார்கள். சக்கரமல்லூர் கிராம மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னால் நன்றி மட்டுமே கூற முடிகிறது.

எதிர்காலத்தில் அப்பாவின் வழிகாட்டுதலுடன் இசைத்துறையில் இருந்து மக்களை மகிழ்விப்பேன். தமிழக மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என உருக்கமாகக் குறிப்பிட்டார்.

Summary

2 days without father... Srikanth Deva's interview after the funeral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.