சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

புழல் ஏரியில் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு: 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க நீர்வளத்துறையினருக்கு உத்தரவு!

புழல் ஏரியை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது குறித்து...

Thiruvallur Collector inspects Puzhal Lake

ழல் ஏரியின் மதகு மற்றும் கால்வாய் பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கவிதா - டிஎன்எஸ்

Updated On :

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த புழல் ஏரியின் மதகு மற்றும் கால்வாய் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஏரியின் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், ஏரியை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மிக கனமழை காரணமாக, புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏரிக்கு வினாநாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 21.2 அடி எனக் குறிப்பிடப்படும் நிலையில், தற்போது நீர்மட்டம் 15 அடியாக உள்ளது.

இதையடுத்து, புழல் ஏரியை பார்வையிட சென்ற ஆட்சியர் கவிதா, ஏரியின் தற்போதைய நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீரின் அளவைக் கணக்கிடும் அளவீட்டு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புழல் ஏரியில் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு

புழல் ஏரியில் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு

மேலும், அணையின் பாதுகாப்பு மற்றும் அணையின் உறுதித்தன்மை, உபரி நீர் வெளியேறும் மதகுகளின் செயல்பாடு, அவற்றின் பராமரிப்பு நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சூழல் நிலவுவதால், நீர்வரத்து மற்றும் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

புழல் ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நீர்வளத்துறையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், ஏரியின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் உபரி நீர் வெளியேற்றம் தொடர்பான நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டார்.

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் புழல் ஏரியில், கனமழைக் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Thiruvallur Collector inspects Puzhal Lake: Water Resources Department ordered to maintain 24-hour surveillance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.