போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

இனி பள்ளிகளுக்கு விடுமுறையில்லை; மழைக்குத்தான் விடுமுறை! கிடைத்த அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் மழைக்குத்தான் விடுமுறை விடப்படும், இனி பள்ளிகளுக்கு விடுமுறையில்லை என்ற தகவல் பற்றி...

வானிலை

வானிலை - facebook

Updated On :

வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகியிருக்கிறது என்று செய்தியைக் கேட்ட தமிழக பள்ளி மாணவர்கள் பலரும் இந்த வாரம் முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ந்திருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் தகவல், அவர்களது மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது. காரணம். இனி தமிழ்நாட்டுக்கு மழையில்லை என்ற தகவல்தான்.

பொதுவாக, மழையைப் பொழியும் மழை மேகங்களை விட, பிரதீப் ஜான் முகநூல் பக்கத்தைத்தான் பலரும் எப்போது மழை என்று சொல்வார் என பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவரே இப்படி சொல்லிவிட்டாரே என்று பலரும் மனம் நொந்து போயிருக்கலாம்.

இன்று காலை மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பது என்னவென்றால், அரபிக் கடலில் உருவான தாழ்வு மண்டலம் தற்போது டெல்டா / வட இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ளது இதனால் நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்

தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; இருப்பினும், மாலை நேரத்திற்குப் பிறகு மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட இலங்கையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னைக்கு பெருத்த ஏமாற்றம்! ஏன்?

இந்தத் தாழ்வு மண்டலம் முன்னதாக சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், அக். 25, 26ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இது தெற்கு நோக்கி நகர்ந்து டெல்டா / இலங்கை கடற்கரை பகுதியை நோக்கிச் சென்றுவிட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை முற்றிலும் கிடைக்கவில்லை.

நவம்பர் 1-ஆம் தேதி வரை வறண்ட வானிலை

அக். 27ஆம் தேதி (நாளை) நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும்; 'அர்னாப்' (Arnab) புயல் கிழக்கு திசைக் காற்றைத் தன்னுடன் ஈர்த்துச் செல்வதால், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை முற்றிலும் நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

எனவே, தீபாவளிக்கு கடை வீதிகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள். நவம்பர் ஒன்றாம் தேதி வரை மழை விடுமுறை விட்டிருக்கும் இந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER