முதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா!
முதலமைச்சர் கோப்பை போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் (அக். 29) நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பரிசுகளை வழங்குகிறார்.
38 மாவட்டங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூா், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் நகரங்களில் கடந்த அக். 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அக். 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளில் மொத்தம் 36,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில், முதலைமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சாதித்த தமிழ்நாட்டு வீரர்களுக்கும் முதல்வர் விஜய், ரொக்க பரிசுகளை வழங்கவுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay will present the prizes to the winners of the Chief Minister’s Cup at an awards ceremony to be held the day after tomorrow (Oct. 29).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


