உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தமிழகத்தில் திரைப்படம் போல உச்சபட்ச த்ரில் காட்சிகள்! தமிழிசை சரமாரி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திரைப்படம் போல உச்சபட்ச த்ரில் காட்சிகள் நடைபெறுவதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tamilisai Soundararajan

தமிழிசை - IANS

Updated On :

வரும் தீபாவளி பண்டிகைக்குள் பால் பொருட்களின் விலை உடனடியாக குறைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்க தோப்பு பகுதியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆவின் மோரின் விலை ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாங்கும் பால் பொருள்களின் விலையைத் தீபாவளிக்குள் கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.

தீபாவளி நெருங்கும் வேளையில், விலையை ஏற்றிவிட்டு பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று சொல்வது திண்டாட்டமாகவே இருக்கும் என்பதால், மோர் மற்றும் பால் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு?

ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளதுடன், தீபாவளி நெருங்கும் வேளையில் நவம்பர் 2 முதல் 4 வரை தீபாவளிக்கு முந்தைய நாள்களில் நியாயவிலைக் கடை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர்களில் 50 சதவீதத்தினர் வேலை நிறுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே ஆவின் பால் பொருட்கள் விலையேற்றம் மற்றும் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

முன்னாள் கல்வித்துறை அமைச்சரே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்குத் திராவிட முன்னேற்றக் கட்சி பல கதைகளை சொல்கிறார்கள். ஆனால், மக்களோட சாமானிய குழந்தைகளின் படிப்பின் மீது அக்கறை செலுத்தாமல் எப்ப பார்த்தாலும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்துப் பேசுகிறீர், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பேசுகிறீர் என்று ஒரு மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டிருந்தார்களே தவிர, மக்கள் நலனில் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.

அதனால இன்னைக்கு அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்றெல்லாம் சொல்ல முடியாது. தவறு செய்திருக்கிறார்கள், இல்லை என்றால் அவர்கள் நிரூபிக்கட்டும்.

அவர் மட்டும் இல்ல, யார் யார் மீதெல்லாம் குற்றச்சாட்டு இருக்கிறதோ அவர்கள் எல்லாம் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மக்கள் வரிப்பணத்தில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பது பாரதிய ஜனதா கட்சியின் மிக மிக அழுத்தமான கருத்து.

அதே நேரத்துல தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்திருக்கிறது. எந்தக் குழந்தைகள் முதலமைச்சரை 'மாமா' என்று அன்போடு அழைத்தார்களோ, அந்தக் குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு குழந்தை 2 வாரமா தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பெண் படை எங்கே போனது? சிங்கப்பெண் படை வருங்கால சிங்கப்பெண்களை கூடப் பாதுகாக்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்சபட்ச திரில் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது.

முதலமைச்சர் திரைப்படம் நடிக்கும் போதுதான் திரில் காட்சிகள் வரும்னு நம்ம கேள்விப்பட்டிருப்போம். ஆனால், 17 கைதிகள் ஒரே நேரத்துல தப்பி ஓடியிருக்கிறார்கள். இது ஒரு பெரிய திட்டமாகவே திட்டப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் குறைவாக இருந்திருக்கிறார்கள். 35 பேர் பணியில் இருக்க வேண்டியவங்க 20 பேர் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சிறையில 200 பேருக்குத்தான் கொள்ளளவு, ஆனா 320 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 17 பேரை அதுவும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் எப்படி ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்?

முகமூடி, கொள்ளையர்கள்தான் போடுவாங்க. ஆனா பெட்சீட்டை காவல்துறையின் முகமூடியா போட்டுட்டு இவங்க தப்பிச்சுப் போயிருக்கிறார்கள்.

செயின் பறிப்பு தெருக்களில் நடந்தாலே நாம் அதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காவல்துறை அதிகாரியோட செயினையே புடுங்கிட்டு சிறை வளாகத்துக்குள்ளேயே போகின்ற ஒரு தன்மை தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இதை முதலமைச்சர் உடனே தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபடுகிறது. அமைச்சர்கள் கூட்டங்களிலேயே மின் தடை ஆகுது. அதுமட்டுமல்ல, மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு முறையற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இன்றைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், ரூ.41.50 பைசாவுக்கு வாங்குறோம்னு சொல்லிட்டு, அதுக்கப்புறம் இப்ப வாங்கல, மூன்று மாதத்திற்கு மின்சாரம் கை வசம் இருக்கிறது என்று சொல்கிறார். ஆக எது உண்மை? முதலில் ரூ.35க்கு வாங்குறேன்னாரு, அப்புறம் அதை கைவிடுகிறேன் என்று சொன்னார்.

இப்ப 41 ரூபாய் 50 பைசாவுக்கு வாங்குறேன்னாரு, அதை கைவிடுகிறேன் என்று சொன்னார். ஆக ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை கைவிடாமல் இருந்தால் நல்லது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.