உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தமிழகத்தை பாஜகதான் ஆளுகிறது! அப்பாவு குற்றச்சாட்டு!

திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைக்க பாஜக முயற்சி.. அப்பாவு விமர்சனம் குறித்து..

TN Assembly EX speaker M Appavu

அப்பாவு - PTI

Updated On :

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், தற்போது நடிகர் தனுஷையும் பாஜக வளர்த்துவிடுவதாகவும் முன்னாள் அவைத்தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தமிழக அரசின் செயல்பாடுகள், மின்துறை, குடிநீர்த் திட்டங்கள், அரசு மருத்துவமனைகள், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.

தனுஷையும் பாஜக வளர்க்கிறது..

திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்க பாஜக முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பின்னால் பாஜக இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருவதாகத் தெரிவித்தார். நடிகர் தனுஷை அரசியலுக்கு வரவழைத்து, அவரை முன்னிறுத்தி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டு..

கடந்த திமுக ஆட்சியில் ராதாபுரம் பகுதியில் களக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏழு பேரூராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க ரூ. 423 கோடி ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து சுத்திகரித்து வீடுகளுக்கு வழங்கும் திட்டம் தற்போது முடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

வள்ளியூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 160-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், ராதாபுரம் அருகே ரூ.15 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானப் பணிகளும் முடங்கியுள்ளதாகவும் கூறினார். இப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்ததாகவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

மின்துறை, ஸ்மார்ட் மீட்டர் குறித்து விமர்சனம்

மின்சாரக் கொள்முதல், மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், மின்துறையை அதானியிடம் ஒப்படைக்கும் நோக்கில் செயற்கையான மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டம்–ஒழுங்கு, ஊழல் குறித்தும் கேள்வி

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரம், போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அரசு வழக்குரைஞர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராதாபுரம் தொகுதியில் குவாரிகள் தொடர்பாகத் தன் மீதும் குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அப்பாவு, சட்டவிரோதத் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கேரளத்துக்குக் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவ்வாறு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அப்பாவு, அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தனது விமர்சனங்களைப் பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.