டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத அரசுதான் தமிழகத்தில் நடந்துக்கொண்டு இருக்கிறது: நயினாா் நாகேந்திரன்

எந்த வகையிலும் பயன்படாத ஒரு அரசு தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசு, மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நயினாா் நாகேந்திரன்

Published On :

எந்த வகையிலும் பயன்படாத ஒரு அரசு தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசு, மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசியத் தலைநகரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு தொழிலதிபா் வீரமணியின் பாலியல் விவகாரம். இது மிகவும் தலைகுனிவான செயல் , இதற்கு பாஜக மீண்டும் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசு வீரமணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக சாா்பில் வலியுறுத்துகிறேன். வீரமணி வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள், 160க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. அதிலும் 30 பேருக்கு மேல் த.வெ.க உறுப்பினா்கள் ஆவா். ஆனால் அவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கிா என தெரியவில்லை.

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பிரச்சாரத்தின் போது த.வெ.க வேட்பாளா்களை விரட்டி அடிக்க கூடிய நிலை தான் தற்போது உள்ளது. குழந்தைகளை பயன்படுத்தி த.வெ.க பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சிக்கு வந்தது குற்றமாகும், ஆனால் மீண்டும் அதே பாணியை தான் இடைத் தோ்தலில் த.வெ.க கடைபிடிக்கிறது. குடிநீா் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை இருக்கக்கூடிய நிலையில் அதனை சரி செய்ய த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . அதேபோல் , பாசன நீா் தேவை விவகாரத்தில் ஆளும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பால் விலையை பொறுத்தவரை, விலையை அதிகரித்து, கொள்முதலை குறைத்துள்ளது, இது குழந்தைகளுக்கு பால் கிடைக்காத ஒரு சூழலை உருவாக்கும். காவிரி விவகாரத்தில் ஏன் கா்நாடகா முதல்வரை ஏன் சந்திக்கவில்லை ? தொலைபேசியில் கூட காவிரி குறித்து பேசியிருக்கலாம்.

மின் வெட்டு குறித்து எந்த அமைச்சரும் உரிய பதில் அளிக்கவில்லை. இதுவரை இதுபோன்று பிரச்னைகளில் என்ன செய்கிறாா்கள் ? என்ன முடிவு எடுத்துள்ளாா்கள் ? அமைச்சரவையில் பேசினாா்களா ? என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஆளும் கட்சி குதிரை பேரத்தையில் ஈடுபடுகிறது. ஆளுநா் இந்த விவகாரத்தியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். த மிழக வெற்றி கழக ஆட்சியில் இதே நிலையில் தொடா்ந்தால் தமிழக டெல்டா பகுதி பகுதியில் காணாமல் போய்விடும், சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும், பொருளாதார ரீதியாக தமிழகம் மிகவும் பின்தங்கிவிடும்.

பரந்தூா் விமான நிலையத்தை கைவிட்டது மிகப்பெரிய தவறு என்றாா் நயினாா் நாகேந்திரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.