அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

புழல் சிறையில் அன்பில் மகேஸ்! முதல் வகுப்பு அறையில் என்னென்ன வசதி?

புழல் சிறையில் அன்பில் மகேஸுக்கு வழங்கப்படும் உணவு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - (கோப்புப் படம்)

Updated On :

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின்போது, தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் சுமாா் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட அன்பில் மைகேஸ், சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போது, அவருக்கு உடல்நலப் பிரச்னை இருக்கிறது, கணைய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதால் எண்ணெய் இல்லாத உணவு வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பில், தனி அறையில் அன்பில் மகேஸ் அடைக்கப்பட்டுள்ளார்.

முதல் வகுப்பு தனி அறை என்றால், அதில் கட்டில், மெத்தை, மின் விசிறி வசதி வழங்கப்படும். அவரது அறையில் கழிப்பறை வசதியும் உள்ளது. ஆனால் ஏசி வசதி இல்லை.

நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டிருப்பதால் வழக்கமான ஆடைகளே அணியலாம்.

நீதிமன்றத்தில் சிறப்பு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி எண்ணெய் இல்லாத குழம்பு, சாதம், வேகவைத்த காய்கறிகள், ரசம், காய்கறி சூப் போன்றவைதான் வழங்கப்படும்.

இரவு உணவுக்கு சப்பாத்தி மற்றும் கஞ்சி, சாலட் போன்றவை கொடுக்கப்படுகிறது. ஆனால், அவருக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு வழங்கப்படுவதில்லை.

அதுபோல, முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டிருப்பதால் வாரத்தில் மூன்று நாள் அசைவ உணவு வழங்கப்படும். அசைவம் என்றால் கோழிக்கறி குழம்பு சாதம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

செய்தித்தாள் வழங்கப்படும், சிறைத் துறையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழக்கம் போல அவர் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

சிறையில் அவரை வேறு கைதிகள் யாரும் சந்திக்க முடியாது. அவரது அறைக்கு சிறப்புப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர், நண்பர்கள் சந்திக்க மட்டும் அனுமதி உண்டு.

வழக்கமாக ஏசி வசதி கொண்ட அறையில் உறங்கும் வழக்கம் இருப்பதாலும், புழல் சிறையில் கொசுத் தொல்லை இருப்பதாலும் அன்பில் மகேஸ் இரவில் உறங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

செவ்வாய்க்கிழமை, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிறையில் அன்பில் மகேஸை சந்தித்துப் பேசியிருந்தார். மீண்டும் இன்று காலை உதயநிதி புழல் சிறைக்கு வந்து தன்னுடைய நண்பரை சந்தித்துள்ளார்.

Summary

Details regarding the food provided to Anbil Mahesh in Puzhal Prison have emerged.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.