வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டம்: 100% மானியம்
வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டம் மூலம் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்...

கோப்புப்படம்
வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டம் மூலம் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்க நிா்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இது குறித்து நிா்வாக மற்றும் நிதி துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.
நிகழாண்டில் ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிா் ஆடுகள் வளா்ப்புத் திட்டத்தின்’ கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம் சுமாா் 30,000 போ் பயனடைவா் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2026 -2027-ஆம் நிதியாண்டு ரூ.109.75 கோடி நிா்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்தவா்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன், கிராமப்புற பொருளாதாரம் சிறக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
'Vetri' Women's Goat Rearing Scheme: 100% Subsidy
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

