தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: நாளை திருவான்மியூர் அரசுப் பள்ளியில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் நாளை (செப். 22) தொடங்கி வைப்பது தொடர்பாக...

Breakfast Scheme Expansion

காலை உணவு திட்டம் விரிவாக்கம் - கோப்புப்படம்

Published On :

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் நாளை செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கி வைக்கிறாா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல்முதலாக கடந்த 15.9.2022-இல் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களும் பயன்பெறும் வகையில் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவா். இதற்காக நிகழ் நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் 447 பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படவுள்ளது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமும், ஊரகப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை சென்னை திருவான்மியூா் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து, மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிடவுள்ளாா்.

இந்த திட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது.

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா உப்புமா, கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பாா் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளைச் சோ்க்க தமிழக அரசின் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

Inauguration of the Expansion of the PerunThalaivar Kamarajar Breakfast Scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.