மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

2029-ல் தேர்தல் சூழ்நிலை மாறும், நீட் தேர்வு ஒழிக்கப்படும்: ஆதவ் அர்ஜுனா

2029-ல் தேர்தல் சூழ்நிலை மாறும்போது நீட் தேர்வு ஒழிக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து...

Aadhav Arjuna | Anitha

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | அனிதா

Published On :3 வினாடிகள் முன்பு

2029-ல் தேர்தல் சூழ்நிலை மாறும்போது நீட் தேர்வு ஒழிக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

நீட் தேர்வு ஒழிப்பு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "இன்றைய நாள் அனிதாவின் நினைவு நாள். 2017-ல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி அனிதா, 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 196.75 பெற்றபோதிலும், அன்றைக்கு நீட் நுழைவுத் தேர்வுக்கு 86 மதிப்பெண்கள் பெற்று, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் சென்று, வெற்றிபெறாத முடியாமல், தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மற்றும் இன்றைய முதல்வர் விஜய் ஆகிய மூவருமே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளனர். இருந்தபோதிலும், இன்றுவரையிலும் செவிசாய்க்காத அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது.

முன்னாள் முதல்வர் அண்ணா கனவுகண்ட இருமொழிக் கொள்கை, இடஒதுக்கீட்டுக்காக போராடியிருக்கிறோம்.

2029-ல் தேர்தல் சூழ்நிலைகள் மாறும் என உறுதியாகச் சொல்கிறோம். சூழ்நிலை மாறும்போது, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் ஒழித்த நாளாக ஒரு நாள் மாறும். இனிவரும் காலங்களில் மாணவ, மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள். வெற்றி ஒரு நாள் நம் பக்கம் வரும்.

இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில்சொல்ல வேண்டிய இடத்தில் அரசியல் சூழ்நிலை மாறும். அனிதாவின் கண்ணீருக்கான பதிலைத் தேடி, நாம் அனைவரும் அரசியலை மேற்கொள்வோம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடும் மனவலிமையைப் பெறுவது சாதாரணமானது அல்ல. இந்தியாவிலேயே இந்தப் பிரச்னையை முதன்முதலில் குரல்கொடுத்த முதல் பெண் அனிதா. அவர்தான் முதல் முன்னுதாரணம். அவர்களின் கனவு ஒரு நாள் நிறைவேறும்" என்று தெரிவித்தார்.

Summary

NEET exam will be abolished in 2029, says Minister Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.