
விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்
பிரதமர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சைகள் குறித்து பெ. சண்முகம் பதில்...
முதல்வர் விஜய் | மார்க்சிஸ்ட் கம்யூ. செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமராக வேண்டுமென்பது தவெகவினரின் ஆசையாக இருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெகவின் சமூக வலைத்தள மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
இதனிடையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் ஆதரிக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:
”தவெக கட்சியினர் அவர்களின் விருப்பத்தையும் ஆசைகளையும் தெரிவித்துள்ளார்கள். இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒரு மாநிலத்துக்குள் இயங்கும் கட்சி, உடனடியாக பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு எல்லாம் கிடையாது. இந்தியா போன்ற பரந்த நாட்டில் ஒரேவொரு குறிப்பிட்ட மாநிலத்தில் இயங்கும் கட்சி பிரதமராக வருவார் என்பதெல்லாம் அந்த கட்சியின் ஆசையாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு தொடரும். எதிர்காலத்திலும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
Summary
TVK members desire to see Vijay become Prime Minister; it shouldn't be taken seriously! – P. Shanmugam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




