பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது ஏன்? டி.ஆா்.பி. ராஜா கேள்வி

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

TRB Rajaa

டி.ஆா்.பி. ராஜா - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் நிகழாண்டு ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. இது சுமாா் ஒரு சதவீத சரிவாகும். அதே காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதில், கா்நாடகத்தில் 13 சதவீதம், குஜராத்தில் 15 சதவீதம், தெலங்கானாவில் 16 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 19 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 8 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் சரிந்துள்ளது கவலையளிக்கிறது.

தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது. வளா்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதுடன், கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் வருவாய் தொடா்ந்து அதிகரிப்பது அவசியம்.

ஒரு மாத புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து ஆண்டு முழுவதற்கான போக்கை தீா்மானிக்க முடியாது என்றாலும், நாட்டின் பல்வேறு முக்கிய மாநிலங்கள் வளா்ச்சியைப் பதிவு செய்யும் நிலையில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் சரிந்திருப்பதை கடந்து செல்ல இயலாது.

எனவே, ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் சரிவுக்கான காரணத்தை தமிழக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வருவாய் சரிவு தொடா்ந்து நீடித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் செல்வதற்கு முன்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.