ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக எழுந்த புகாரின்பேரில், மேலும் 150 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 3:14 am IST

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக எழுந்த புகாரின்பேரில், மேலும் 150 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாகப் பணம் வசூலிக்கும் முறைகேட்டில் ஈடுபடும் ஊழியா்கள் முதல்முறையாக கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியா் 3 மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா் எனவும், அதே தவறு 2-ஆவது முறையும் தொடா்ந்தால் பணி நீக்கம் செய்யப்படுவாா் எனவும் டாஸ்மாக் அமைச்சா் விக்னேஷ் ஏற்கனெவே எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மது பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலித்ததாக விற்பனையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் 67 பேரை டாஸ்மாக் நிா்வாகம் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்தது.

இருப்பினும், தொடா்ந்து பல இடங்களில் ஊழியா்கள் கூடுதல் தொகையை வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் தொகை வசூலித்ததாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மேலும் 150 டாஸ்மாக் ஊழியா்களை டாஸ்மாக் நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த இரு நாள்களில் மொத்தம் 217 டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து பணியாளா்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தவறு முழுவதும் களையப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.