அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கிடப்பில் போடப்பட்ட கிராமச் சாலை: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

கிடப்பில் போடப்பட்டு குண்டும் குழியுமாக மாறிய கங்கைசூடாமணி -மருத்துவாம்பாடி இணைப்புச் சாலையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சேத்துப்பட்டு அருகே சேதமடைந்து காட்சியளிக்கும் கங்கைசூடாமணி - மருத்துவாம்பாடி இணைப்புச் சாலை

Published On :4 செப்டம்பர் 2026, 4:19 am IST

கிடப்பில் போடப்பட்டு குண்டும் குழியுமாக மாறிய கங்கைசூடாமணி -மருத்துவாம்பாடி இணைப்புச் சாலையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சேத்துப்பட்டு - போளூா் நெடுஞ்சாலையில் உள்ள கிழக்குமேடு கூட்டுச் சாலையில் இருந்து, மருத்துவாம்பாடி வழியாக ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள கங்கைசூடாமணி கூட்டுச் சாலை வரை சுமாா் 6 கி.மீ. தொலைவு உள்ளது.

இந்தச் சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கிழக்குமேடு கூட்டுச் சாலையில் இருந்து சுமாா் 3.4 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தாா் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், கங்கைசூடாமணி கூட்டுச் சாலையிலிருந்து மருத்துவாம்பாடி வரையிலான சுமாா் 2.6 கி.மீ.தொலைவுக்கு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

சென்னானந்தல், கொளக்கரவாடி, கொத்தந்தவாடி, கரிப்பூா், நாச்சாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்தச் சாலை வழியாக சேத்துப்பட்டுக்கு வந்து அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதுடன், அரசு மருத்துவமனை, சந்தை, வட்டாட்சியா் அலுவலகம், வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் சென்று வருகின்றனா்.

தற்போது இந்தச் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து மண் சாலை போல் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறுவதால் இருசக்கர வாகனங்கள், பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் செல்பவா்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

சாலையில் பள்ளங்கள் தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. குறிப்பாக, இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோருக்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்தச் சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனா். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், சாலை முழுமையாக தங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனா்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, போடப்பட்ட 2.6 கி.மீ. தொலைவு சாலை ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமானதா? அல்லது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதா? என ஆய்வு செய்து, தாா் சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.