மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கோயில் நிலம் ஆக்ரமிப்பு! அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

கோயில் நிலத்தை ஆக்ரமித்தது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 4:33 pm IST

மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்ரமித்திருப்பவர்களிடம் சொற்ப வாடகையை பெற்றுக் கொண்டு அவர்களை தொடர அனுமதித்திருப்பதற்கு இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக வாடகை பாக்கி வைத்திருந்த, கோயில் நில ஆக்ரமிப்பாளரிடமிருந்து வெறும் ரூ.1 லட்சம் அளவுக்கு வாடகை என்ற பெயரில் பெற்றுக் கொண்டு அவர்களை வாடகைதாரராகத் தொடர அனுமதித்திருப்பது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

சென்னை, மேற்கு மாம்பாலம் ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ரூ,.25 லட்சம் அளவுக்கு வாடகை பாக்கி இருக்கும்போது, ரூ.1.42 லட்சம் வாடகையை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களை வாடகைதாரர்களாக்க முயல்வது குறித்தும் நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

கோயில் ஆக்ரமிப்பு நிலத்தில் அன்னதான கூடம், வாகன நிறுத்துமிடம் கட்டுவதாகக் கூறிய நிலையில் அந்த நிலைப்பாட்டை மாற்றியது குறித்தும் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவில் நிலத்தை ஆக்ரமித்து இருந்தவர்களிடம் வாடகை பக்கியில் சொற்ப பணத்தை வசூலித்து விட்டு அவர்களை தொடர அனுமதிப்பதா?என்று கேள்வி எழுப்பியதோடு, செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்ரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.