பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!
காவல் துறை, உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை ஆற்றுகிறார்.
முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)
பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிமுகம் செய்யவுள்ளாா்.
தொடா்ந்து, 2026 தமிழ்நாடு ஊராட்சிகள் 2-ஆம் திருத்த மசோதாவை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், 2026 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதாவை, வணிகவரித் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் அறிமுகம் செய்யவுள்ளனா்.
இதையடுத்து, காவல் துறை, உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வா் ஜோசப் விஜய் பதிலுரை ஆற்றுகிறாா்.
பின்னா், வனத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சா் ரா.வீ.ரஞ்சித், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், சுற்றுச்சூழல், காலநிலைத் துறை மானியக் கோரிக்கையை வே.க.ராஜீவ் ஆகியோா் தாக்கல் செய்யவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






