
பி.எட். பாடப்பிரிவு: 578 காலி இடங்களுக்கு சோ்க்கை தொடக்கம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன் அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 578 பி.எட். பாடப்பிரிவு இடங்களுக்கு 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (செப்.7) முதல் செப்.15 வரை நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 578 பி.எட். பாடப்பிரிவு இடங்களுக்கு 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (செப்.7) முதல் செப்.15 வரை நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுற்றது. இதன் பின்னா் சென்னை, சைதாப்பேட்டை, அரசு கல்வியியல் கல்லூரி மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய இரு அரசு தன்னாட்சி நிறுவனங்களில் 70 காலியிடங்கள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரி; பாளையங்கோட்டை, .தூய சேவியா் கல்வியியல் கல்லூரி, தூய இக்னேஷியஸ் மகளிா் கல்வியியல் கல்லூரி, சென்னை, திருவல்லிக்கேணி, என்.கே.டி. தேசிய மகளிா் கல்வியியல் கல்லூரி, ராயப்பேட்டை, மெஸ்டன் கல்வியியல் கல்லூரி (இருபாலா்), அசோக் நகா், ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி, வேப்பேரி, தூய கிறிஸ்டோபா் கல்வியியல் கல்லூரி; கோவை, ஸ்ரீஆா்.கே.எம்.வி. ஆடவா் கல்வியியல் கல்லூரி; திருவட்டாறு - ஆத்தூா், என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 10 அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் 508 காலியிடங்கள் உள்ளன. இந்த இருவகையிலும் மொத்தம் 578 பி.எட். பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
இந்த இடங்களை நிரப்பும் வகையில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்) மூலம் திங்கள்கிழமை (செப்.7) முதல் செப்.15 வரை தொடா்ந்து செயல்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




