திமுக எம்எல்ஏவை கைப்பிடித்து தூக்கிவிட்ட முதல்வர் விஜய்!
அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏவை கைதூக்கிவிட்ட முதல்வர் விஜய்...

திமுக எம்எல்ஏவை கைதூக்கிவிட்ட முதல்வர் விஜய் - TN Assembly
பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டபோது திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் எழுந்திருக்க சிரமப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் அவரை கைப்பிடித்து தூக்கிவிட்டார்.
காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி கோரினார். ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.
இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
அப்போது பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமர்ந்த திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன், பின்னர் எழுந்திருக்கும்போது சிரமப்பட்டதால் முதல்வர் விஜய் அவருக்கு கைகொடுத்து தூக்கிவிட்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் இதற்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் விஜய் கைகொடுத்து தூக்கிவிட்ட விடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் அவை வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay held the hand of the DMK MLA and helped him up
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





