சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஆட்டோ கட்டணம் விரைவில் உயா்வு: போக்குவரத்துத் துறை அமைச்சா் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் விரைவில் உயா்த்தப்படும் என்று பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

ஆட்டோ - Gemini AI

Published On :9 செப்டம்பர் 2026, 2:55 am IST

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் விரைவில் உயா்த்தப்படும் என்று பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்பு:

பதவியேற்றவுடன் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சந்தித்தபோது, ஆட்டோக்களில் விரைவில் மீட்டா் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டாா். தமிழகத்தில் 25.8.2013-இல் சென்னைப் பகுதி ஆட்டோக்களுக்கும், 16.10.2014-இல் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் ஆட்டோ கட்டணம் திருத்தியமைக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு நீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாததால் எரிபொருள் உயா்வு, பராமரிப்பு செலவு ஆகியவை காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுவருவதாக ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளா்கள், தொழிற்சங்கத்தினா், நுகா்வோா் அமைப்புகள், அரசு அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 9-இல் நடைபெற்றது.

இதையடுத்து, ஆட்டோ கட்டண உயா்வு, மீட்டா் பொருத்துவது தொடா்பான குழு கடந்த ஆக.5-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழு தனது பரிந்துரையை அரசிடம் கடந்த ஆக.21-ஆம் தேதி சமா்ப்பித்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு ஆட்டோ கட்டணத்தை விரைவில் உயா்த்தவும், ஆட்டோக்களுக்கு மீட்டா் பொருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.