சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 8) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - ENS

Published On :8 செப்டம்பர் 2026, 9:56 am IST

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெயக்குமார், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்த பெருந்துறை தொகுதியில் அதிமுக ஜெயக்குமார் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தி விசாரணைக்கு வருகிறது.

அதுபோல முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை கோரிய வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நேற்று தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

What are the Cases hearing today in Madras HC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.