
ஆசிரியர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதை தவெக அரசு கைவிட வேண்டும்! அன்பில் மகேஸ்
காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணிகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் சொந்த செலவில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை கூறியதற்கு எதிர்ப்பு...

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
காமராஜர் காலை உணவுத் திட்டம் வருகிற செப். 17 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கிவைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சொந்த செலவில் செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு 'காமராசர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிற செப். 17 ஆம் தேதி விருதுநகரில் செப். 17 ஆம் தேதி முதல்வா் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்நிலையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,
"நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்டை மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்!
இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
நிரà¯à®µà®¾à®à®¤à¯ திறனறà¯à®± Take Diversion à®à®°à®à¯ பà¯à®¯à®°à¯ மாறà¯à®±à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¾à®à¯à®à¯à®®à¯ à®à®°à¯à®µà®¤à¯à®¤à¯ à®®à¯à®±à¯à®¯à®¾à®© நிதி à®à®¤à¯à®à¯à®à¯à®à¯à®à®¿à®²à¯ à®à®¾à®à¯à®à¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯!
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) September 12, 2026
à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ à®à®¾à®²à¯ à®à®£à®µà¯à®¤à¯ திà®à¯à®à®¤à¯à®¤à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®²à¯à®µà®°à¯ à®à®¾à®®à®°à®¾à®à®°à¯ à®à®¾à®²à¯ à®à®£à®µà¯à®¤à¯ திà®à¯à®à®®à¯ à®à®© பà¯à®¯à®°à¯ மாறà¯à®±à®®à¯ à®à¯à®¯à¯à®¤à¯, à®à®¤à®±à¯à®à®¾à®© பà¯à®¯à®°à¯à®ªà¯ பலà®à¯ மாறà¯à®±à¯à®µà®¤à®±à¯à®à®¾à®© à®à¯à®²à®µà¯ à®à®à®¿à®°à®¿à®¯à®°à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯â¦
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







